
ஒரு மாநிலத்தில் உருவாகும் மாசுபாடு… இன்னொரு மாநிலத்தின் விவசாயத்தை பாதிக்குமா? கிருஷ்ணகிரி மாவட்டம் கெலவரப்பள்ளி அணையில் உருவாகியுள்ள இந்த வெள்ளை நுரை, ஒரு சாதாரண நிகழ்வு அல்ல. இது நமது நீர்வளத்தின் தரம் குறித்து எழுந்துள்ள மிகப் பெரிய எச்சரிக்கை. தமிழ்நாடு நீர்வளத் துறை, தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் (NGT) தாக்கல் செய்த ஆவணங்களில், பெங்களூருவின் Bellandur, Agara, Varthur ஏரிப் பகுதிகளிலிருந்து வரும் மாசுபாடு தென்பெண்ணை ஆற்றின் நீர்ப்பிடிப்புப் பகுதியை பாதிப்பதாக குறிப்பிட்டுள்ளது. அதே நேரத்தில், கெலவரப்பள்ளி அணையில் எடுக்கப்பட்ட முதற்கட்ட நீர் மாதிரிகளில் Phosphate, Sulphate அளவுகள் அதிகமாகவும், Dissolved Oxygen மிகவும் குறைவாகவும் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த அணையின் நீர் 8,000-க்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலங்களுக்கு பாசனமாக பயன்படுகிறது. எனவே இது வெறும் நுரை பற்றிய செய்தி அல்ல; விவசாயம், குடிநீர், சுற்றுச்சூழல் மற்று�
This post was published on 05th July, 2026 by Sudhan on his Instagram handle "@sudhankarunanithi (Sudhan Karunanithi)". Sudhan has total 371.0K followers on Instagram and has a total of 802 post.This post has received 1.3K Likes which are lower than the average likes that Sudhan gets. Sudhan receives an average engagement rate of 0.6% per post on Instagram. This post has received 27 comments which are lower than the average comments that Sudhan gets. Overall the engagement rate for this post was lower than the average for the profile.