
மயிலாடுதுறையில் நடந்த இந்த சம்பவம் சாதாரண மரணம் இல்லை… பல கேள்விகளை எழுப்பும் ஒரு case. 19 வயதான பார்த்திபன் மற்றும் 17 வயதான திவ்யதர்ஷினி காதலித்ததாக கூறப்படுகிறது. ஆனால் இந்த உறவை பெண்ணின் குடும்பம் எதிர்த்ததாக தகவல். ஜூன் 29-ம் தேதி இரவு, இரண்டு குடும்பங்களுக்கும் தகராறு நடந்திருக்கிறது. அந்த நேரத்தில் பார்த்திபன் மீது தாக்குதல் நடந்ததாகவும், சாதி பெயர் சொல்லி இழிவுபடுத்தியதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து, பார்த்திபன் தரப்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் அடிப்படையில் SC/ST சட்டத்தின் கீழ் பெண்ணின் தந்தர் உட்பட 5 பேர்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆனா அதற்கடுத்த நாளே… ஜூன் 30 அதிகாலையில், இருவரும் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார்கள். புகார் முதலில். மரணம் அடுத்த நாள். இது தற்கொலையா? அல்லது ஆணவப் படுகொலையா? உண்மை post-mortem, forensic report வந்த பிறகுதான் தெரிய வரும். ஆனா ஒரு கேள்வி மட்டும் மிச்சம்: காதலுக்கு இன்னும் இவ்வளவு பெரிய விலை கொடுக்க வேண்டிய சமூகத்தில்தான் நாம வாழ்றோமா?
This post was published on 01st July, 2026 by Sudhan on his Instagram handle "@sudhankarunanithi (Sudhan Karunanithi)". Sudhan has total 371.0K followers on Instagram and has a total of 802 post.This post has received 1.7K Likes which are lower than the average likes that Sudhan gets. Sudhan receives an average engagement rate of 0.6% per post on Instagram. This post has received 20 comments which are lower than the average comments that Sudhan gets. Overall the engagement rate for this post was lower than the average for the profile.