
தமிழக வெற்றி கழகத்தின் ஆலந்தூர் வடக்கு பகுதி செயலாளர் வேம்புலி… கணவனை இழந்த ஒரு பெண் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டுக்குள் சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக போலீஸ் வழக்கு பதிவு செய்து கைது செய்திருக்காங்க. இந்த மாதிரி ஒரு சம்பவம் பற்றி கேள்விப்படும்போது ரொம்ப shocking-ஆவும், வேதனையாவும் இருக்கு. ஏன்னா பெண்களுக்கு பாதுகாப்பு பற்றி தினமும் பேசிக்கிட்டு இருக்குற சூழ்நிலையிலேயே, இப்படி ஒரு சம்பவம் நடக்கிறது என்றால் அது இன்னும் பெரிய கவலையை உருவாக்குது. இதே நேரத்தில் சிஎம் விஜய் அவர்கள் என்ன சொல்றார்னா — ‘இந்த மாதிரி குற்றங்கள் குறையணும்னா தனிமனித ஒழுக்கம் முக்கியம்’னு சொல்றார். சரி… தனிமனித ஒழுக்கம் முக்கியம்தான். அதில் மாற்றுக் கருத்தே கிடையாது. ஆனா இங்கே கேட்க வேண்டிய கேள்வி என்னன்னா — ஒரு பெண் தன்னோட வாழ்க்கையை ஒழுக்கமா வாழ்ந்தா மட்டும் போதுமா? அவளை சுற்றி இருக்கும் மனிதர்களும் ஒழுக்கமா இருக்க வேண்டாமா? அவளை பாதுகாக்க வேண்டிய அமைப்புகளும் சரியாக வேலை செய்ய வேண்டாமா? ஏன்னா பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறையணும்னா, தனிமனித ஒழுக்கம் மட்டும் போதாது. அதோட சேர்த்து அரசும் சரியா செயல்படணும். முக்கியமா awareness உருவாக்கணும். அந்த awareness வெறும் social media post-ல முடிஞ்சிடக் கூடாது. அது school-ல இருந்து ஆரம்பிக்கணும்… college-ல தொடரணும்… office-லயும் workplace-லயும் கட்டாயமாக கொண்டு போகணும். பெண்களை எப்படி மதிக்கணும், boundaries என்ன, consent என்ன, தவறு என்ன — இந்த basic awareness-ஐ government proper-ஆ spread பண்ணணும். அதோட, குற்றம் செய்ய நினைக்கிறவர்களுக்கு சட்டத்தின் பயம் இருக்கணும். பாதிக்கப்பட்டவர்கள் பயமில்லாம புகார் கொடுக்கக்கூடிய சூழ்நிலை இருக்கணும். குற்றவாளிகளுக்கு உடனடி மற்றும் கடுமையான நடவடிக்கை இருக்கணும். இந்த எல்லாத்தையும் சேர்த்தால்தான் இந்த மாதிரி குற்றங்கள் குறையும். சிங்கப்பெண் படை உருவாக்கிட்டா மட்டும் போதாது. மேடையில ‘தனிமனித ஒழுக்கம்’ன்னு பேசினாலே போதாது. அதை ground level-ல எப்படி implement பண்ணப் போறீங்க? பெண்களுக்கு எதிரான இந்த குற்றங்களை practically எப்படி தடுக்கப் போறீங்க? ஏன்னா ‘time வேணும்’ன்னு சொல்லிக்கிட்டே இருந்தா… இங்கே இன்னும் பல பெண்களின் வாழ்க்கை பாதிக்கப்படும். அதனால இப்போ கேட்க வேண்டிய கேள்வி — பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்க இந்த அரசு உண்மையிலேயே என்ன செய்யப் போகுது?
This post was published on 12th June, 2026 by Sudhan on his Instagram handle "@sudhankarunanithi (Sudhan Karunanithi)". Sudhan has total 374.9K followers on Instagram and has a total of 778 post.This post has received 1.3K Likes which are lower than the average likes that Sudhan gets. Sudhan receives an average engagement rate of 1.35% per post on Instagram. This post has received 16 comments which are lower than the average comments that Sudhan gets. Overall the engagement rate for this post was lower than the average for the profile.