
விவசாயிகள் போராடுறாங்கன்னு என் கணக்குக்கு எதுவும் தெரியல” — அமைச்சர் சொல்ற இந்த வார்த்தைதான் இப்போ பெரிய கேள்வியை எழுப்புது. ஒரு பக்கம் விவசாய கடன் தள்ளுபடி முழுமையாக நிறைவேறலன்னு குற்றச்சாட்டு. இன்னொரு பக்கம் கர்நாடகா Mekedatu திட்டத்தை முன்னெடுக்க தீவிரமாக நகர்கிறது. அதே நேரத்தில் தண்ணீர், மின்சாரம், பாசனம் போன்ற அடிப்படை பிரச்சனைகளுக்காக தமிழ்நாட்டின் பல பகுதிகளில் விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்திக்கொண்டிருக்கிறார்கள். அரியலூரில் மின்வெட்டு பிரச்சனையால் விவசாயிகள் சாலையில் இறங்கி போராடும் நிலை வந்திருக்கிறது. இந்த எல்லா நிகழ்வுகளும் நடந்துகொண்டிருக்கும்போது “போராட்டமே தெரியல” என்று சொல்லப்படுவது மக்களின் உண்மையான நிலையை புரிந்துகொள்ளாத நிலையை காட்டுகிறதா என்ற கேள்வி எழுகிறது. அரசியலை தாண்டி, விவசாயம் இந்த நாட்டின் முதுகெலும்பு. விவசாயிகளின் பிரச்சனைகளை முதலில் ஏற்றுக்கொண்டு, அதற்கு உடனடி தீர்வு கொடுப்பது அரசின் அடிப்படை பொறுப்பு. உங்கள் கருத்து என்ன? விவசாயிகளின் குரல் அரசுக்கு உண்மையிலேயே சென்று சேருதா? #tvk #Farmers #Mekedatu #dmk #powercut
This post was published on 15th June, 2026 by Sudhan on his Instagram handle "@sudhankarunanithi (Sudhan Karunanithi)". Sudhan has total 374.9K followers on Instagram and has a total of 778 post.This post has received 768 Likes which are lower than the average likes that Sudhan gets. Sudhan receives an average engagement rate of 1.35% per post on Instagram. This post has received 35 comments which are lower than the average comments that Sudhan gets. Overall the engagement rate for this post was lower than the average for the profile. #Mekedatu #dmk #Farmers #powercut #tvk has been used frequently in this Post.