
திருவாரூர் புதிய பேருந்து நிலையத்தில், தனது தந்தையின் வருகைக்காக தனியாக காத்திருந்த 27 வயது இளம்பெண்ணிடம், TVK-வின் திருத்துறைப்பூண்டி வடக்கு ஒன்றியச் செயலாளர் ஆனந்த் மற்றும் அவரது நண்பர் அசோக் இரட்டை அர்த்த வசனங்களால் அவமரியாதை செய்து அத்துமீறலில் ஈடுபட்டதாக வெளியான தகவல் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரு பெண், பகல் நேரத்தில், மக்கள் நடமாட்டம் இருக்கும் பேருந்து நிலையத்தில்கூட பாதுகாப்பாக நிற்க முடியாத நிலை. அதுவும் சாதாரண நபரால் இல்லை — ஒரு அரசியல் கட்சியின் பொறுப்பில் இருக்கும் நிர்வாகியால். அப்படியானால் மக்கள் கேட்கும் கேள்வி நேரடியானது: “மாற்றம்”ன்னு பேசுற TVK-வின் ground reality இதுதானா? பெண்களின் மரியாதையை காக்க முடியாத நிர்வாகிகளை உருவாக்கி வைத்து, மேடைகளில் values பேசுவதால் என்ன பயன்? சம்பவம் வெளிச்சத்துக்கு வந்த பிறகு கட்சியிலிருந்து நீக்கிவிட்டோம் என்பதாலே matter close ஆகிடுமா? அல்லது… இப்படிப்பட்ட மனநிலையோட இருக்கும் நபர்களுக்கு அரசியல் அதிகாரம் கொடுத்ததே பெரிய தவறா? TVK-விடம் மக்கள் கேட்கும் கேள்வி simple: உங்கள் கட்சியில் discipline இருக்கிறதா? Women respect ஒரு slogan-ஆ? இல்ல உண்மையிலேயே ஒரு value-ஆ? ஒரு தலைவரின் உண்மையான முகம் அவர் பேசும் speech-ல் தெரியாது. அவரோட நிர்வாகிகள் எப்படி நடக்கிறார்கள் என்பதில்தான் தெரியும்.
This post was published on 18th June, 2026 by Sudhan on his Instagram handle "@sudhankarunanithi (Sudhan Karunanithi)". Sudhan has total 374.9K followers on Instagram and has a total of 778 post.This post has received 1.3K Likes which are lower than the average likes that Sudhan gets. Sudhan receives an average engagement rate of 1.35% per post on Instagram. This post has received 56 comments which are lower than the average comments that Sudhan gets. Overall the engagement rate for this post was lower than the average for the profile.