
இன்னைக்கு நிறைய பேர் revolution பற்றி பேசுறாங்க. ஆனா வாழ்க்கையையே revolution-ஆ வாழ்ந்தவர்கள் ரொம்ப கம்மி. அந்த listல முதல் வரிசையில நிற்பவர் சேகுவேரா. பணக்கார குடும்பத்துல பிறந்தவர். Doctor degree முடிச்சவர். நினைச்சிருந்தா வாழ்க்கையை ரொம்ப comfortable-ஆ வாழ்ந்திருக்கலாம். ஆனா அவர் அந்த வழியை தேர்வு பண்ணல. ஒரு bike journey-ல Latin America முழுக்க சுற்றி, மக்களோட கஷ்டம், ஏழ்மை, சுரண்டல், அநீதி எல்லாத்தையும் நேர்ல பார்த்தார். அந்த பயணம்தான் அவரோட வாழ்க்கையையே மாத்தியது. அதுக்கப்புறம் அவர் ஒரு doctor மட்டும் இல்ல… ஒரு fighter ஆனார். அதிகாரத்துக்காக இல்ல. பணத்துக்காக இல்ல. ஒரு idea-க்காக. அதனாலதான் அவரை சுட்டுக் கொன்றாலும்… அவரோட சிந்தனையை யாராலும் கொல்ல முடியல. அதான் சேகுவேரா இன்னைக்கும் உயிரோட இருக்கிறாரு… புத்தகங்கள்ல, போராட்டங்கள்ல, இளைஞர்களோட மனசுல. பிறந்தநாள் வாழ்த்துகள் புரட்சியின் முகமே. ✊🔥
This post was published on 14th June, 2026 by Sudhan on his Instagram handle "@sudhankarunanithi (Sudhan Karunanithi)". Sudhan has total 374.9K followers on Instagram and has a total of 778 post.This post has received 4.8K Likes which are lower than the average likes that Sudhan gets. Sudhan receives an average engagement rate of 1.35% per post on Instagram. This post has received 63 comments which are lower than the average comments that Sudhan gets. Overall the engagement rate for this post was lower than the average for the profile.